திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 28 நவம்பர் 2018 (08:54 IST)

இப்போதைக்கு இடைத்தேர்தல் வாய்ப்பு இல்லை: பிரேமலதா விஜயகாந்த்

தேர்தலை சந்திக்க திமுகவும், அதிமுகவும் பயப்படுவதால் இப்போதைக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, 'தமிழகத்தில் இப்போதைக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பே இல்லை. கஜா புயல், சூழல் சரியில்லை, ரெட் அலர்ட் போன்ற காரணங்களை தலைமைச்செயலர் மூலம் கூற வைத்து தேர்தலை ஒத்தி வைக்கவே முயற்சிகள் நடைபெற்று வருகின்றன

ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக டெபாசிட் இழந்தது, அதிமுக தோல்வி அடைந்தது. எனவே ஆண்ட திமுகவும், ஆட்சி செய்து வரும் அதிமுகவும் தேர்தலை சந்திக்க பயப்படுகிறது என்பதே உண்மையான நிலவரம். 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பாராளுமன்ற தேர்தலுடன் நடைபெறவே வாய்ப்பு உள்ளது என்று பிரேமலதா கூறியுள்ளார்.

மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர்தான் கூட்டணி குறித்து தேமுதிக முடிவு செய்யும் என்றும், கூட்டணி குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் தான் முடிவெடுப்பார் என்றும் பிரேமலதா கூறினார்.