திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் வேட்பாளர் பட்டியல்.. 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு..!
வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க திமுக தான் முதல் கட்சியாக தயாராகி உள்ளது என்பதும் ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி விட்ட நிலையில் தேர்தல் அறிக்கையையும் இன்று காலை வெளியிட்டது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக தலைவரும் முதலமைச்சர் ஆன மு க ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். இந்த வேட்பாளர் பட்டியலில் 11 புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் மற்றும் அதற்கான வேட்பாளர்கள் குறித்த முழு விவரங்கள் இதோ:
1. வடசென்னை - கலாநிதி வீராசாமி
2. தென்சென்னை - த.சுமதி (எ) தமிழச்சி தங்கப்பாண்டியன்
3. மத்திய சென்னை - தயாநிதி மாறன்
4. காஞ்சிபுரம் - ஜி.செல்வம்
5. ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு
6. அரக்கோணம் - எஸ்.ஜெகத்ரட்சகன்
7. வேலூர் - டி.எம்.கதிர் ஆனந்த்
8. தருமபுரி - ஆ.மணி
9. திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை
10. ஆரணி - எம்.எஸ்.தரணிவேந்தன்
11. கள்ளக்குறிச்சி - கே.மலையரசன்
12. சேலம் - டி.எம்.செல்வகணபதி
13. ஈரோடு - கே.இ.பிரகாஷ்
14. நீலகிரி - ஆ.ராசா
15. கோவை - கணபதி ராஜ்குமார்
16. பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி
17. பெரம்பலூர் - அருண் நேரு
18. தஞ்சாவூர் ச.முரசொலி
19. தேனி - தங்கத்தமிழ்ச்செல்வன்
20. தூத்துக்குடி - கனிமொழி
21. தென்காசி - ராணி
Edited by Mahendran