செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 21 ஜனவரி 2019 (14:06 IST)

6 பேர் கொண்ட தேர்தல் பேச்சுவார்த்தைக் குழு – அறிவித்தது திமுக

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்துக் கூட்டணிக் கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்த 6 பேர் கொண்ட குழுவை திமுக அறிவித்துள்ளது.

இன்னும் 4 அல்லது 5 மாதத்தில் நாடளுமன்றத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக – காங்கிரஸ்- இடதுசாரிக் கட்சிகள் – விடுதலை சிறுத்தைகள் கொண்ட கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் தொகுதிப் பங்கீடு குறித்த விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் பணிகள் குறித்த விவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திமுக சார்பில் ஏழுப் பேர் கொண்ட குழுவைத் திமுக பொதுச்செயலாளர் க அன்பழகன் இன்று அறிவித்துள்ளார்.

இன்று காலை க அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் ‘2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவுக்குத் தலைவராக திமுக பொருளாளர் துரைமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். குழு உறுப்பினர்களாக திமுக துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார்.