செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (08:08 IST)

ஆளுனரை கண்டித்து நாளை கண்டன பொதுக்கூட்டம்: திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு..!

ஆளுநரை கண்டித்து நாளை திமுக கூட்டணி கட்சிகள் கண்டன பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஆளுநர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கூட்டம் சாட்டி வருகின்றனர். முதலமைச்சர் இது குறித்து சட்டமன்றத்திலேயே தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஆளுநர் கிடப்பில் போட்ட மசோதாக்களை ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோரி ஏப்ரல் 12ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடைபெறும் இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் ஸ்டெர்லைட் போராட்டம் சனாதன ஆதரவு பேச்சுக்களுக்கு வருத்தம் தெரிவிக்காதது ஆகியவற்றை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த கவர்னர் மற்ற மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva