1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 5 ஏப்ரல் 2023 (09:43 IST)

ராகுல் காந்தி ஒரு ஒரு ஆணவம் பிடித்த பரம்பரை: பாஜக கண்டனம்..!

ராகுல் காந்தி பத்திரிக்கையாளர் விஷயத்தில் தனது பாட்டியை கடைப்பிடித்து வருகிறார் என பாஜகண்டனம் தெரிவித்துள்ளது. 
 
பாஜக செய்தி தொடர்பாளர் அனில் பலூனி அவர்கள் இது குறித்து கூறிய போது ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகைகளை ராகுல் காந்தி மீண்டும் தாக்கியுள்ளார் என்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களையும், ஊடகங்களையும் இழிவுபடுத்துவது அவரது மனப்பான்மை என்றும் தெரிவித்துள்ளார்.
 
ஜனநாயக கட்டமைப்பை அடிக்கடி தாக்குவதில் தனது பாட்டியை அவர் பின்பற்றி வருகிறார் என்றும் அவர் ஒரு ஆணவம் பிடித்த பரம்பரை என்றும் கூறியுள்ளார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
முன்னதாக ராகுல் காந்தி நேற்று முன்தினம் மேல்முறையீடு செய்ய செல்லும்போது பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ’நீங்கள் ஏன் எப்போதும் பாஜக சொல்வதையே சொல்கிறீர்கள்? என கடுமையாக விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva