வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (15:03 IST)

ராகுல் காந்தி தகுதி நீக்கம்; தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம்! – காங்கிரஸ் அறிவிப்பு!

ks alagiri
ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டி அறிவித்துள்ளது.

மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக எம்.பி ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் குஜராத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. அதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து ராகுல்காந்தி மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ராகுல்காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் போராட்டத்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஏப்ரல் 15ம் தேதி 76 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும், ஏப்ரல் 20ம் தேதி அன்று மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடைபெறும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K