செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (13:57 IST)

எஸ்கேப் ஆகும் மனநிலையில் கூட்டணி கட்சிகள்?!; திமுகவிற்கு அதிகரிக்கும் நெருக்கடி!

திமுக பிரமுகர்கள் சிலர் கட்சியிலிருந்து விலக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு எழுந்துள்ள நிலையில் கூட்டணி கட்சிகளும் வேறு பக்கம் தாவ ஆயத்தமாய் உள்ளதாக பேசிக்கொள்ளப்படுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக எம்.எல்.ஏ குக செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்ட நிலையில் திமுகவில் மூத்த அரசியல்வாதிகளுக்கு மதிப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார். குக செல்வத்தின் கருத்தை அமோதித்துள்ள பாஜக பொன்.ராதாகிருஷ்ணன் திமுகவினர் பலர் பாஜகவில் இணைய பேசி வருவதாக கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த சர்ச்சைகள் குறித்து சூசகமான கருத்துகளை தெரிவித்துள்ள அமைச்சர் கடம்பூர் ராஜு திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் அதிமுகவிடம் சட்டமன்ற கூட்டணி குறித்து பேசி வருவதாக தெரிவித்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்ற தேர்தல்களில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழகத்தில் திமுகவின் பலத்தை நிரூபித்த நிலையில் அதே பலத்தோடு திமுக சட்டமன்ற தேர்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறி வருகின்றன.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டுமென காத்திருக்கின்றன அரசியல் வட்டாரங்கள்.