வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 15 பிப்ரவரி 2020 (20:45 IST)

ஓட்டு போட்டது உங்களுக்கு, போராட அழைப்பது ரஜினியையா? நெட்டிசன்கள் கேள்வி

சென்னையில் திடீரென நேற்று இரவு சிஏஏ சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து போராட்டம் செய்தவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தியதாகவும் செய்திகள் வெளிவந்தன என்பது தெரிந்ததே. தடியடியால் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் ’இஸ்லாமியருக்கு ஏதாவது ஒன்று என்றால் உடனே குரல் கொடுப்பதாக கூறிய ரஜினி எங்கே ?என்று ஹேஷ்டேக்கை பதிவு செய்து அதனை டிரெண்ட் ஆக்கி வருகின்றனர் 
 
இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தியும் ரஜினி ஏன் கண்டிக்கவில்லை, குரல் கொடுக்கவில்லை என்று பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்திய இடத்திற்கு முக ஸ்டாலின் வந்தாரா? உதயநிதி ஸ்டாலின் வந்தாரா? எதிர்க்கட்சியை சேர்ந்த ஒரு எந்த ஒரு எம்பி அல்லது எம்எல்ஏ வந்தார்களா? ரஜினி மட்டும் ஏன் போராட வேண்டும்?
 
மக்களுக்காக சேவை செய்யத்தான் 38 எம்பிக்களை ஜெயிக்க வைத்திருக்கின்றோம், ஆனால் அவர்கள் ரஜினியை போராட அழைப்பது ஏன்? என்ற கேள்வியை நெட்டிசன்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் #இஸ்லாமிய_துரோகி_திமுக மற்றும் #கலவரம்தூண்டும்திமுக ஆகிய ஹேஷ்டேக்குகளையும் நெட்டிசன்கள் ட்ரெண்டாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது