செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 மார்ச் 2021 (13:37 IST)

வரும் சட்டமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டி:வைகோ

வரும் சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. மதிமுக 8 தொகுதிகள் கேட்டதாகவும் ஆனால் 5 தொகுதிகள் வரை தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது. அதுவும் அந்த ஐந்து தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுக நிபந்தனை வைத்ததாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்த போவதாகவும் செய்தியாளர்களிடம் கூறிய வைகோ, வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என்று கூறினார்
 
தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாத நிலையில் தனி சின்னத்தில் போட்டி என வைகோ தெரிவித்துள்ளது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது