அமமுக தலைமையில் புதிய கூட்டணி: தினகரன் அதிரடி அறிவிப்பு!

dinakaran
அமமுக தலைமையில் புதிய கூட்டணி: தினகரன் அதிரடி அறிவிப்பு!
siva| Last Updated: செவ்வாய், 2 மார்ச் 2021 (14:08 IST)
அமமுக தலைமையில் புதிய கூட்டணி அமைய இருப்பதாகவும் திமுகவை வீழ்த்துவதே இந்த கூட்டணியின் ஒரே இலக்கு என்றும் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்
அதிமுகவுடன் அமமுக இணைப்பு குறித்த ஊகங்களுக்கு பதிலளிக்க முடியாது என்று கூறிய அவர் பாஜக, அமமுக கூட்டணியில் இணையுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும் அமமுக தலைமையில் நிச்சயம் ஒரு புதிய கூட்டணி அமையும் என்றும் எங்களுடைய இலக்கு திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது தான் என்று கூறிய அவர் எங்கள் கூட்டணியில் இணையும் காட்சிகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார்

மேலும் வரும் தேர்தலில் அமமுக என்ன மாதிரியான முடிவு எடுக்கும் என்பது குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காவிட்டால் பாஜகவே அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி அமமுக தலைமையிலான கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :