வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (08:22 IST)

சமூகநீதியின் கேன்சர் திமுக: மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசம்..!

சமூக நீதியின் கேன்சர் திமுக என மத்திய அமைச்சர் எல் முருகன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 
 
சமூக நீதியின் கேன்சராக திமுக உள்ளது என்றும் ஆட்சி மீதான அதிருப்தியை மடைமாற்ற சனாதனத்தை கையில் எடுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
திராவிடம் என்ற வார்த்தையை வழங்கியதே சனாதனம் தான் என்றும் சனாதனம் ஒழிப்பு மாநாடு என்றால் இந்து ஒலிப்பு மாநாடு என்றுதான் பொருள் என்றும் அவர் தெரிவித்தார். 
 
அமைச்சர் உதயநிதியின் பேச்சு இந்து மதத்தில் மீதான வன்பம் நிறைந்த தாக்குதல் என்றும் அரசியல் அறியாமையால் மத உணர்வுகளை அவர் தூண்டிவிட்டு உள்ளார் என்றும் அமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார்.  
 
மாற்று மதத்தினர் வாக்குகளை பெற மத வேற்றுமைகளை உதயநிதி உருவாக்கியுள்ளார் என்றும்  கீழ்வெண்மணி முதல் நாங்குநேரி வரை திராவிட மாடலின் சனாதன ஒழிப்பு நாறுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva