1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 9 மார்ச் 2020 (12:29 IST)

பேசிகிட்டே இருக்க மாட்டேன் டைரக்ட் ஆக்‌ஷன் தான்: மிரட்டி விட்ட விஜயகாந்த்!

மதுரை பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் பேசியது தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மதுரை திருப்பரங்குன்றத்தில் மகளிர் தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
இந்த கூட்டத்தில் விஜயகாந்த் பேசுவாரா என காத்திருந்த தொண்டர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக விஜயகாந்த் பேசினார், அவர் பேசியதாவது... 
 
மகளிர் அனைவர்க்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள். மக்களுக்கு ஏதேனும் ஒன்றெனில் பேசிக்கொண்டிருக்க மாட்டேன் ஒன்லி ஆக்சன் தான் என தெரிவித்தார். இவரின் இந்த பேச்சு அங்கிருந்தவர்களை ஆற்பரிக்க வைத்தது.