1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 6 ஏப்ரல் 2020 (16:12 IST)

தேமுதிக தலைமை அலுவலகத்தை கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்த அனுமதி - விஜயகாந்த் அறிக்கை !

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க , காஞ்சிபுரம் மாவட்டம் - ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி, சென்னை - தேமுதிக தலைமை கழகத்தை பயன்படுத்தி கொள்ள தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்க இந்தியாவிலும் வரும் 14 ஆம்தேதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாக உயர்ந்து வருகிறது.  இருப்பினும்  பாதிக்கப்பட்டவர்களில் பலரும் குணமடைந்துவருகின்றனர்.

ஏற்கனவே,டாட்டா  நிறுவனம், விப்ரோ நிறுவன, கோடெக் மகெந்திரா, ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி, நடிகர் அக்‌ஷ்ய்குமார் ஆகியோர்  பிரதமர் மோடி கேட்டுக்கொண்ட படி தாராளமான உதவி செய்துள்ளனர். மற்ற நடிகர்கள்,நட்சத்திரங்கள் பலரும் உதவி செய்துவருகின்றனர்.

இந்த நிலையில், பிரபல நடிகரும் , தேசிய முற்போக்கு திராவிட கட்சியின் தலைவருமான விஜயகாந்த், இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், கோயம்பேட்டில் உள்ள தனது தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தை கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்த அனுமதிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க கல்லூரி மற்றும் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.