வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (12:24 IST)

தேர்தலில் களமிறங்குகிறார் கேப்டன்! – பிரேமலதா அறிவிப்பால் தொண்டர்கள் குஷி!

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஈடுபட உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளது தேமுதிக தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் கட்சி செயல்பாடுகள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த அவரது பிறந்தநாள் விழாவில் பேசிய பிரேமலதா எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து நின்று போட்டியிட தேமுதிக தொண்டர்களும், நிர்வாகிகளும் விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தேர்தல் குறித்து பேசியுள்ள அவர் “தேர்தலில் கூட்டணி அமைப்பதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து ஜனவரி மாதம் நடைபெறும் தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். மேலும் இந்த முறை சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய உள்ளார்” என தெரிவித்துள்ளார்.