Daily Horoscope
✕

பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு முன் எல்லோரும் யோசியுங்கள்: பிரேமலதா

Written By Siva
Updated: புதன், 4 அக்டோபர் 2023 (07:49 IST)
பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு முன்னர் அரசியல் கட்சிகள் யோசிக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலக்கி வைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள அரசியல் கட்சிகள் அதிமுகவுடன் இணையுமா அல்லது பாஜகவுடன் இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
இந்த நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழகத்திற்கு பாஜக எதுவும் செய்யவில்லை என்றும் கச்சத்தீவு பிரச்சனை, காவிரி பிரச்சனை, மீனவர்கள் பிரச்சனை உட்பட எந்த பிரச்சனையும் தீர்க்கவில்லை என்றும் எனவே தமிழகத்திற்கு எந்த விதமான நல்லதும் செய்யாத பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு தமிழக அரசியல் கட்சிகள் யோசிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 
 
இதனை அடுத்து தேமுதிக பாஜகவுடன் கூட்டணியில் சேராது என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

காங்கிரஸ் கோரிக்கை நிராகரிப்பு.. மறுவரைவு மசோதாவை ஆதரிக்கிறோம்.. முக ஸ்டாலின் பேட்டி...

இண்டியா கூட்டணியினர் பேச்சுவார்த்தை ஓவர்!.. என்ன முடிவெடுக்கப்போகிறார் ஸ்டாலின்?..

மசோதாவுக்கு திமுக ஆதரவு கொடுத்தால் என்ன நடக்கும்? ஆதரவு கொடுக்காவிட்டால் என்ன நடக்கும்?

ராகுல் காந்தி வரும்போது கோ பேக் காங்கிரஸ் பதாகை... திமுக தொண்டர்களால் பரபரப்பு...

இன்று சென்னையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்.. நாளை டெல்லியில் என்டிஏ கூட்டம். அரசியலில் பரபரப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments