வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 அக்டோபர் 2023 (14:23 IST)

சென்னையில் பாஜக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: தேதியை அறிவித்த அண்ணாமலை..!

சென்னை, அமைந்தகரையில் நாளை மறுநாள் பாஜக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது
 
இன்று நடைபெற இருந்த கூட்டம், அண்ணாமலை டெல்லி செல்வதால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாளை மறுநாள் 5ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் அண்ணாமலை ஊரில் இல்லாத நிலையில் பாஜக பொறுப்பாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு  விடுக்கப்பட்டதாகவும், சென்னையில் பாஜக தலைமையகத்தில் பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் எனபாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் தெரிவித்த தாகவும் செய்திகள் வெளியானது.
 
Edited by Mahendran