வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (17:59 IST)

நாங்கதான் உண்மையான எதிர்க்கட்சி: பிரேமலதா பேட்டி

premalatha
தமிழகத்தில் திமுகதான் ஆளும் கட்சி என்பது அனைவரும் அறிந்திருந்தாலும் தற்போது எதிர்க்கட்சி எது என்பதில் அரசியல் கட்சிகளுக்கும் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது 
 
அதிகாரபூர்வமாக சட்டமன்ற எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்தான் அதிமுக தான் எதிர்க்கட்சி என்றாலும் பல கட்சிகள் நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி என உரிமை கொண்டாடி வருகின்றன
 
குறிப்பாக சமீபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மக்கள் தேவையின் அடிப்படையில் நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி என்று கூறினார் 
 
அதேபோல் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையும் நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று கூறினார். இந்த நிலையில் தற்போது தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா உண்மையில் நாங்கள் தான் எதிர்க்கட்சி என்றுகூறியுள்ளார் 
 
இந்த நிலையில் தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி எது என்பதை யாராவது கூறுங்கள் என நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்