1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 16 ஜூன் 2022 (16:13 IST)

தேமுதிக தலைவர் ஆகின்றாரா விஜய பிரபாகரன்?

Vijaya prabhakaran
தேமுதிக தலைவராக தற்போது விஜயகாந்த் இருக்கும் நிலையில் அவரது மகன் விஜயபிரபாகரன் தேமுதிக தலைவர் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் ஈடுபடாமல் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தேமுதிக பொருளாளராக இருக்கும் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் அனைத்து பணிகளையும் செய்து வருகிறார். 
 
இந்த நிலையில் தேமுதிகவில் விஜயபிரபாகரனுக்கு கட்சிப் பொறுப்பு வழங்குவது குறித்து விஜயகாந்த் முடிவு எடுப்பார் என்று பிரேமலதா பேட்டியளித்தார் 
 
மேலும் தேமுதிகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்காததே அதிமுக தோல்விக்கு காரணம் என்றும் அவர் கூறினார் 
 
இந்த நிலையில் தேமுதிக விஜய பிரபாகரன் தலைமையில் இயங்கினால் புத்துயிர் பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்