விஜய் பாபு விவகாரம்: நடிகர் சங்கத்தில் இருந்து விலகிய நடிகை !
நடிகை விஜய்பாபு விவகாரத்தில் பிரபல நடிகர் சங்கத்தில் இருந்து விலகியுள்ளார்.
மலையாள சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஜய்பாபு. இவர் மீது ஒரு நடிகை பாலியல் புகார் கூறினார். இதுகுறித்து போலீஸார் விஜய்பாபு மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார்.
அவர் மீது மேலும் சில பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து விஜய்பாபுவை நீக்க பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை மாலா பார்வதி நடிகர் சங்கப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே விஜய்பாபு தானே விலகுவதாக அவரது தரப்பில் கூறப்பட்ட நிலையில் நடிகை மாலா பார்வதி இந்த முடிவு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.