தொடர்புடைய செய்திகள்
- உங்களை காண அரசியல் களம் காத்திருக்கிறது: விஜயகாந்துக்கு கமல் வாழ்த்து
- தனித்து போட்டி என அறிவித்த சில நிமிடங்களில் வாழ்த்து கூறிய முக ஸ்டாலின்
- அதிமுக vs தேமுதிக: முடிக்கப்பார்கும் பிரேமலதா, பூசி மொழுவும் ஜெயகுமார்!
- தேர்தலில் சோலோவாக நிற்கிறதா தேமுதிக!? – பகீர் கிளப்பும் பிரேமலதா!
- வானத்த போல உயர்ந்தவரே! நெறஞ்ச மனசுக்காரரே! – டைட்டிலில் வாழ்த்து சொன்ன தமிழிசை!
2021 ல் கேப்டன்தான் முதல்வர் – தேமுதிக தொண்டர்களின் போஸ்டரால் பரபரப்பு!
நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இந்நிலையில் மதுரையில் அவரது கட்சியினர் அடித்து ஒட்டியுள்ள போஸ்டர் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் ‘புரட்சிகர தமிழகத்தை, புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் தலைமையில் உருவாக்க தயாராவோம்’ என கூறப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் தமிழக அரசியலில் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த இருந்தாலும், இப்போது அவரது கட்சி அந்த அளவுக்கு ஆதிக்கத்தை செலுத்தவில்லை என்பதுதான் கள நிலவரம். அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிகவினரின் இந்த போஸ்டர் கூட்டணிக் கட்சியில் உள்ளவர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
