திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 17 பிப்ரவரி 2022 (11:20 IST)

விஜய்காந்த் பிரச்சாரத்திற்கு வராததால் பாஜகவுக்கு தாவிய வேட்பாளர்!

விஜயகாந்த் பிரசாரத்திற்கு வரவில்லை என்பதால் அதிருப்தியடைந்த தேமுதிக வேட்பாளர் பாஜகவிற்கு தாவிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை மணலியில் பாஜகவில் இணைந்த தேமுதிக பிரமுகர், ‘விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வரவில்லை என்பதால் பாஜகவில் சேர்ந்தேன் என கூறினார்
 
சென்னை மணலி 20 வது வார்டில் தேமுதிக சார்பில் வேட்பாளராக களம் இறங்கியவர் வேலவடியான் என்பவர் திடீரென பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து அந்த பகுதிக்கு பிரச்சாரத்திற்கு வந்த பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்த நிலையில் அவர் பாஜகவில் சேர்வதாக தெரிவித்தார்
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது தேமுதிக சார்பில் தம்மை ஆதரித்து பிரச்சாரம் செய்ய யாரும் வரவில்லை என்றும் தனது தொகுதிக்கு கேப்டன் விஜயகாந்துக்கு வருவார் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன் என்றும் அதனால் பாஜகவில் இணைந்து என்றும் கூறியுள்ளார்