வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 10 மார்ச் 2021 (07:43 IST)

தனித்து போட்டியிடுகிறது தேமுதிக: இன்று 140 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்!

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது என்பதும் இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நேற்று அந்த கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி, தேமுதிகவை தங்களுடைய கூட்டணியில் இணையுமாறு அழைப்பு விடுத்தது என்றும் ஆனால் அந்த அழைப்பை தேமுதிக ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் அதிரடியாக தேமுதிக தனித்துப் போட்டி என்ற முடிவை எடுத்துள்ளதாகவும் இதனையடுத்து 140 தொகுதிக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை தேமுதிக என்று வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் மற்றும் விஜய பிரபாகரன் ஆகிய 4 பேர் போட்டியிடும் தொகுதிகள் உள்பட 140 வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ள தேமுதிக, எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்