1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 30 ஜூன் 2023 (18:25 IST)

தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு எப்போது? வெளியான தகவல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  ஒவ்வொரு ஆண்டும் பயணிகளுக்கான முன்பதிவு தொடங்கப்படும். இந்த ஆண்டிற்கான முன்பதிவு வரும் ஜூலை 12 முதல் தொடங்கவுள்ளது.

இந்தியாவில் தீபாவளி பண்டிகை அன்று சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வர். அப்போது, கூட்ட நெரிசல் அதிகமாகக் காணப்படும் என்பதால், நீண்ட தூரம் செல்பவர்கள் ரயிலில் பயணம் செய்வார்கள்.

இதற்காக பயணிகள் முன்பதிவு செய்வர். எனவே இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஒட்டி, ரயில் டிக்கெட் முன்பதிவு வரும்  ஜூலை 12 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், வட இந்திய ரெயில்களுக்கான முன்பதிவு முன்பதிவு தேதியில் இருந்து  ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மாறுதல் இருக்கலாம் என்று  ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.