வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : வெள்ளி, 28 ஜூன் 2019 (21:17 IST)

பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவுரை

கரூர் மாவட்டத்தில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் - நிலத்தடி நீர் மட்டம் உயர்த்துவது குறித்து கிராம சபை சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
ஆண்டுதோறும் மூன்று முறை நடைபெறும் கிராம சபை கூட்டம் இந்தாண்டு மே மாதம் தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்ததால் இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சி பகுதிகளிலும் நடைபெற்றது. 
 
இதன்  ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் கரூர் ஒன்றியத்திற்குட்பட்ட நெரூர் தென்பாகம் ஊராட்சியில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் கடும் வறட்சி காலங்களில் குடி நீர் தட்டுப்பாடை தவிர்ப்பது , பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அறிவுரை வழங்கியதோடு, அவர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார். மேலும், இந்த கிராம சபைக்கூட்டத்தின் நடுவே காவிரி கரையோர பகுதிகளில் அதிகளவில் மணல் கொள்ளை நடைபெறுகிறது.
 
அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் இருந்த கலைசெல்வி என்ற பெண்மணி கேள்வி எழுப்பியதால் சிறிது நேரம் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த குற்றச்சாட்டினை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டும் என உறுதியளித்தார். பின்னர் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்வோர்களுக்கு மழை நீர் சேகரிப்பு குறித்த நோட்டீஸ் வழங்கினார். இந்த நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குனர் ஜெயந்தி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.