மழை வேண்டி கரூர் அருகே வேம்புக்கும், அரசமரத்திற்கும் திருமணம் நிகழ்ச்சி

ஆனந்த குமார்|
மழை வேண்டியும் உலக நன்மை வேண்டியும் கரூர் அருகே வேம்புக்கும், அரசமரத்திற்கும் திருமணம் நிகழ்ச்சி பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வை.புதுர் கிராமத்தில் விநாயகர் கோவிலில் அமைந்திருக்கும் வேம்புக்கும், அரசனுக்கும் திருமணம்  நிகழ்ச்சி நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில் வேம்பு மரத்திற்கும், அரசமரத்திற்கும் திருமணம் நடத்தி வைத்தால் மழை பொழியும், மக்களின் மீது பாவங்கள் தீயசக்திகள் விலகிபோகும், திருமணம் ஆகாமல் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்கும் என்றும் ஐதீகம்.

இதனால் அப்பகுதியில் உள்ள அனைவரும்  திரண்டுவந்து இந்த திருமண நிகழ்ச்சியை கண்டு ஆசிர்வாதம் செய்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.இதில் மேலும் படிக்கவும் :