1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. district administration to close all the tourist place

கனமழை எச்சரிக்கை!.. கன்னியாகுமாரியில் சுற்றுலாத்தளங்களை மூட உத்தரவு!..

kanniyakumari
வட கிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. தற்போதுவரை மழை நின்றபாடில்லை.

இன்றும் கூட சில மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களை மறு உத்தரவு வரும் வரை மூடுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. மிக கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
வரியை குறைத்த விஜய் - நன்றி தெரிவித்த இண்டிகோ