தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ 6 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது: சபாநாயகர் அதிரடி
தமிழகத்தில் சமீபத்தில் சபாநாயகர் தனபால் அவர்கள் 18 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்த நடவடிக்கை செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது போலவே புதுவையில் சொத்துக்குவிப்பு வழக்கில் எம்எல்ஏ அசோக் ஆனந்தன் என்பவர் சமீபத்தில் எம்.எல்.ஏ பதவியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்
இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ அசோக் ஆனந்தன் அவர்களின் தொகுதியான தட்டாஞ்சாவடி என்ற தொகுதி காலியான தொகுதியாக சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவித்துள்ளார்.
மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ அசோக் ஆனந்தன் இனிவரும் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனால் புதுவை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.