செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 30 அக்டோபர் 2018 (08:46 IST)

18 எம்.எல்.ஏ.க்களின் அறைகளுக்கு சீல்: சபாநாயகர் அதிரடி உத்தரவு

சமீபத்தில் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏகளின் விடுதி அறைகளுக்கும் சீல் வைக்க சபாநாயகர் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என சமீபத்தில் 3வது நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பளித்தார். இதனையடுத்து 18 தொகுதிகளும் காலி என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருசில எம்.எல்.ஏக்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டப்பேரவை விடுதிக்குள் சென்று வருவதாக கூறப்பட்டது. இதனையடுத்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டப்பேரவை விடுதியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் அறைகளையும் பூட்டி சீல் வைக்க சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து 18 அறைகளும் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

பூட்டி சீல் வைக்கப்பட்ட இந்த 18 அறைகளும் சட்டப்பேரவை செயலகம் வசம் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், இந்த அறைகளை அனுமதியின்று யாரும் திறக்க கூடாது என்றும் விடுதி அறைகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது