பாமகவில் இயக்குனர் தங்கர் பச்சான் போட்டி..! பாமக வேட்பாளர் பட்டியல் வெளியானது!
பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அதில் போட்டியிடும் வேட்பாளர்களை பாமக தற்போது அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தலில் பாஜக – பாமக கூட்டணி அமைத்துள்ள நிலையில் பாமகவுக்கு 10 எம்.பி சீட்டுகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது பாமக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் உள்ளது.
பாமக வேட்பாளர் பட்டியல்:
- திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா
- அரக்கோணம் – வழக்கறிஞர் கே.பாலு
- ஆரணி – முனைவர் அ. கணேஷ் குமார்
- கடலூர் – திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான்
- மயிலாடுதுறை – ம.க.ஸ்டாலின்
- கள்ளக்குறிச்சி – இரா.தேவதாஸ்
- தர்மபுரி – அரசாங்கம்
- சேலம் – ந. அண்ணாதுரை
- விழுப்புரம் – முரளி சங்கர்
Edit by Prasanth.K
