1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 20 மார்ச் 2024 (16:11 IST)

பலாப்பழம் குடுத்தா.. தலையில வெச்சுக்கிட்டு ஓட்டுப் பிச்சை எடுக்கணும்! – மன்சூர் அலிகான் பேட்டி!

Mansoor Alikhan
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் வேலூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் மன்சூர் அலிகான்.



மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் முதல்கட்டமாக மற்றும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு பெரிய சிறிய கட்சிகளும் போட்டியிடும் நிலையில் இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கிய மன்சூர் அலிகானும் போட்டியிடுகிறார்.

வேலூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த அவர் இன்று வேலூரி தேர்தல் அலுவலகம் சென்று முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “இந்திய ஜனநாயக புலிகள்தான் என் கட்சி. ஆனால் இன்னும் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. அதற்கு சில மாதங்கள் ஆகும். தற்போது சுயேச்சையாகதான் நிற்கிறேன். தேர்தல் சின்னமாக பலாப்பழம், கிரிக்கெட் பேட் மற்றும் லாரி கேட்டுள்ளேன். லாரிக்கு தமிழில் சரக்கு உந்து என்று பெயர். சரக்கு என்றால் அந்த சரக்கு இல்லை” என்று பேசியுள்ளார்.


மேலும் “தேர்தல் வேலைகள் இன்னும் பல உள்ளன. இனி வீடுவீடாக சென்று ஓட்டு கேட்க வேண்டும். பலாப்பழம் சின்னம் கொடுத்தால் பலாப்பழத்தை தலையில் வைத்துக் கொண்டு வீடு வீடாக சென்று ஓட்டுப் பிச்சை கேட்பேன். அப்படி கேட்டுதான் இன்று பலரும் பதவிகளை அடைந்துள்ளார்கள்” என பேசியுள்ளார்.

Edit by Prasanth.K