ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 10 அக்டோபர் 2018 (16:22 IST)

யோவ் உட்காருய்யா... சும்மா வா.. வான்னுகிட்டு: வைகோவை கலாய்த்த துரைமுருகன்

நேற்று நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது கைதுக்கு பல எதிர்ப்புகள் மற்றும் ஆதரவுகள் வந்தது. முக்கியமாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இவரை சந்திக்க சென்றபோது அனுமதி வழங்காததால் சாலை மறியலில் ஈடுப்பட்டார். 
 
அப்போது, போலீஸ் அதிகாரிகள் அவரை எழுந்து செல்லுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் வைகோ அதை ஏற்காததால், வைகோவை போலீசார் கைது செய்தனர். பின்னர் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டார். 
 
அந்த திருமண மண்டபத்தில், வைகோவை காண திமுக தலைவர் ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் வந்திருந்தனர். 
 
தன்னை காண வந்த அனைவரையும் வைகோ எழுந்து நின்று வரவேற்றார். இதனால் கடுப்பான துரைமுருகன், யோவ் உட்காருய்யா, இது கல்யாண மண்டபம்தான், சும்மா கல்யாண வீடாட்டம் எழுந்து எழுந்து எல்லாரையும் வா.. வான்னுகிட்டு என கேலி செய்தார். இதனால் அங்கு சற்று நேரத்திற்கு சிரிப்பலை ஏற்பட்டது.