1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 18 அக்டோபர் 2023 (12:22 IST)

பாஜக 'சைத்தான்' கூட்டணி.. வெளியேறியதில்1000 மடங்கு மகிழ்ச்சி: திண்டுக்கல் சீனிவாசன்

பாஜக சைத்தான் கூட்டணி என்றும் அந்த கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை அடுத்து நாங்கள் வெளியேறியதில்1000 மடங்கு மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்த நிலையில் அதிமுக தொண்டர்கள் அதனை கொண்டாடினர். பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியே வந்த பின்னர் தான் சிறுபான்மை அமைப்பின் தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில்  பாஜக சைத்தான் கூட்டணி என்றும் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறியதால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் அந்த கூட்டணியில் இருந்து எப்போது விலகுவோம் என்று நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்தோம் என்றும் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.  
 
இனி பள்ளிவாசல் தெருவாக இருந்தாலும் சரி அரசமரத்து தெருவாக இருந்தாலும் சரி நாங்கள் தைரியமாக செல்வோம் என்றும் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் ஓட்டு கேட்க வராதே என்று சொன்னவர்கள் இனி சொல்ல மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran