1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 18 அக்டோபர் 2023 (07:53 IST)

பாஜகவை கூட்டணியில் இருந்து அதிமுக விலக்கியது அமித்ஷா ஐடியாவா? அதிர்ச்சி தகவல்..!

Edappadi amitshah
சமீபத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு இரண்டு நாட்கள் முன்பு மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுகவின் பக்கபலமாக இருக்கும்  சிறுபான்மையினர் ஓட்டை பிரிக்க வேண்டும் என்பதற்காக பாஜகவை கூட்டணியில் இருந்து விலக்குவது போல் விலக்குங்கள் என்று அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, அமித்ஷா ஐடியா கொடுத்ததாகவும் திமுகவின் சிறுபான்மையினர் வாக்கை பிரிக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமித்ஷா கொடுத்த  டாஸ்க் என்றும் கூறப்படுகிறது

எடப்பாடி பழனிசாமி தற்போது சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்காக தீவிர முயற்சி எடுத்து வருகிறார். சிறுபான்மையினர் ஓட்டுகளை பெற்று திமுகவை தோற்கடித்து தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் பாஜகவுடன் இணைந்து கொள்ளலாம் என்பதுதான் அதிமுகவின் திட்டமா என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

அது மட்டும் இன்றி  திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே இந்து விரோத கட்சிகள் என்ற பிரச்சாரத்தை பரப்பி பாஜக டபுள் கேம். ஆட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva