’லியோ’ விவகாரத்தில் திமுக அரசின் சர்வாதிகாரம்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு..!
திமுக ஆட்சியில் லியோ விவகாரத்தில் சர்வாதிகாரம் நடக்கிறது எனவும், திரையுலகில் இருப்பவர்கள் அதனைத் தட்டிக் கேட்க வேண்டும் எனவும், அமைதியாக இருக்கக் கூடாது எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
ஒரு திரைப்படம் எடுத்தால் ரெட் ஜெயன்ட் கேட்கும் அடிமட்ட விலைக்கு கொடுக்க வேண்டும் என்ற சர்வாதிகாரம் திரைத்துறையில் கோலோச்சப்படுகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்..
அதிமுக ஆட்சியில் முழுமையாக காவல்துறைக்குச் சுதந்திரம் கொடுக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் விவசாயிகள் நெசவாளர்கள் தொழிலாளர்கள் மீனவர்கள் அனைவரும் பாதிக்கின்றனர்
மேலும் மஞ்சள் காய்ச்சல், தக்காளி காய்ச்சல் எல்லாம் திமுக ஆட்சியில் தான் வரும். 10 மாதங்களாக சுகாதாரத்துறை தூங்குகிறதா? அமைச்சகர் மா.சுப்பிரமணியன் ஓட மட்டும் தான் செய்கிறார்.
காவிரி பிரச்னையில் கோட்டை விட்டுவிட்டார்கள் . தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் குறுவையைப் பாதுகாத்து இருக்கலாம், மேலும் எதிர்பார்த்த அளவு மானியமும் கொடுக்கவில்லை. .
Edited by Mahendran