தொடர்புடைய செய்திகள்
- 1 கோடியை நெருங்கும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை! – இந்தியாவில் கொரோனா!
- உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்கள்! – பிரதமர் மோடி முதலிடம்!
- 8.49 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு!
- குடியரசு தின விழா அன்று டெல்லி நோக்கி பேரணி… விவசாயிகள் எச்சரிக்கை
- முன்னணி சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் 16 பேருக்குக் கொரோனா! அதிர்ச்சி தகவல்!
இந்தியாவிலும் தோன்றியது மர்ம மோனோலித்! – மக்கள் அதிர்ச்சி!
உலக நாடுகள் முழுவதும் திடீரென தோன்றி மறையும் மோனோலித் பீதியை கிளப்பியுள்ள நிலையில் அது இந்தியாவிலும் தோன்றியுள்ளது.
முதன்முதலாக அமெரிக்காவின் உடா பாலைவனப்பகுதியில் மோனோலித் என்றழைக்கப்படும் உலோக தூண் திடீரென தோன்றி சில நாட்களில் மாயமானது. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து பிரிட்டன், நெதர்லாந்து என உலகம் முழுவதும் பல நாடுகளில் இந்த மோனோலித் தோன்றி மறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த மர்ம மோனோலித் தற்போது இந்தியாவில் தோன்றியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியார் தோட்டம் ஒன்றில் இந்த மர்ம மோனோலித் தோன்றியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அந்நிறுவனம் அதை யாரும் வைத்தார்களா என்பது பற்றி எதுவும் சொல்லவில்லை.
அடுத்த கட்டுரையில்
