1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 ஜனவரி 2025 (09:41 IST)

திண்டுக்கல், கோவை, சேலம்… 11 மாவட்டங்களில் சீமான் மீது வழக்கு!

Seeman

பெரியார் குறித்து இழிவாக பேசிய குற்றச்சாட்டில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 11 மாவட்டங்களில் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுவது அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. சமீபத்தில் அவர் பெரியார் குறித்து பேசிய கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதை தொடர்ந்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சீமானை கண்டித்து சென்னையில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட முயன்று கைதாகினர்.

 

சீமானின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகள் சீமானுக்கு எதிராக புகார் அளித்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

கடலூர், தென்காசி, சேலம், மதுரை, நெல்லை, திண்டுக்கல் என இதுவரை 11 மாவட்டங்களில் பல்வேறு பிரிவுகளில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட உள்ள நிலையில், ஈரோடை சேர்ந்த ஈவேராவையே சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது அங்கு நாம் தமிழர் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K