புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 14 மே 2018 (10:53 IST)

சசிகலா என் சகோதரியே இல்லை: திவாகரன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் ஏகப்பட்டுள்ள குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில் சமீபத்திய குழப்பமாக சசிகலா பெயரை திவாகரன் பயன்படுத்த கூடாது என சசிகலா வழக்கறிஞர் அனுப்பிய நோட்டீஸ் தான் என்பது அனைவரும் அறிந்ததே. சசிகலாவின் குடும்பத்தினர் ஒருகாலத்தில் ஒற்றுமையாக இருந்த நிலையில் தற்போது சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் அவர்களுக்குள் இருந்த ஒற்றுமை நீங்கிவிட்டதாக கருதப்படுகிறது. குறிப்பாக தினகரன், திவாகரன் நேரடியாக மோதும் அளவிற்கு நிலைமை முற்றிவிட்டது.
 
இந்த நிலையில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த கூடாது என்று நோட்டீஸ் அனுப்பிய சசிகலா இனிமேல் தனக்கு சகோதரி இல்லை என்றும் அவர் தன்னுடைய முன்னாள் சகோதரி என்றும் திவாகரன் கூறியுள்ளார். மேலும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா இடையே பிரச்சனை ஏற்பட திவாகரன் தான் காரணம் என்றும் திவாகரன் கூறியுள்ளார்.
 
மேலும் சசிகலாவின் பெயரை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் வழங்கியது தினகரனின் பிளாக்மெயில் அரசியல் என்றும், சசிகலா நோட்டீஸ் வழங்கியதால் தங்களது அரசியல் பயணம் நின்றுவிடாது என்றும் திவாகரன் கூறியுள்ளார். யாரும் பிறக்கும்போது பதவியுடன் பிறப்பதில்லை என்றும் மனநிலை சரியில்லை என கூறிவிட்டு எனக்கு நோட்டிஸ் அனுப்பியது ஏன் என்றும் மனநிலை சரியில்லாத ஒருவருக்கு யாராவது நோட்டீஸ் அனுப்புவார்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.