நம்ம நோக்கம் இதுதான்: செந்தில் பாலாஜியிடம் மனம் விட்டுப்பேசிய தினகரன்!
நம்ம நோக்கம் இதுதான்: செந்தில் பாலாஜியிடம் மனம் விட்டுப்பேசிய தினகரன்!
அதிமுக எம்எல்ஏக்கள் 28 பேர் நேற்று தினகரனை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் அதிமுகவில் மூன்றாவது அணியை உருவாக்கியுள்ள தினகரன் அதிமுகவில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகியுள்ளார்.
வரிசையாக எம்எல்ஏக்கள் நேற்று தினகரன் வீட்டை நோக்கி படையெடுத்தாலும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் விசிட் தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தினகரனும் செந்தில் பாலாஜியும் நீண்ட நேரம் மனம் விட்டுப்பேசியதாக கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜியிடம் தினகரன், நம்முடைய நோக்கம் ஆட்சியை கலைக்கிறதோ அவங்களுக்கு எதிராக செயல்படுறதோ இல்லை. நம்முடைய செல்வாக்கையும், நம்ம பக்கம் இவ்வளவு பேரு இருக்காங்க என்பதையும் அவங்களுக்கு காட்டணும் என கூறியுள்ளார்.
மேலும் நம்ம தரப்பில் இருந்து நான்கு பேர் அமைச்சரவையில் இடம்பெறனும். நம்ம ஆதரவு இல்லாமல் அவங்க ஆட்சி நடத்த முடியாது என்பது அவங்களுக்கு தெரியணும். அதே நேரத்தில் எந்த சூழ்நிலையிலும் நாம்மால் ஆட்சிக்கு ஆபத்து வந்துட கூடாது என தினகரன் கூறியதாக தகவல்கள் வருகின்றன.
பதிலுக்கு செந்தில் பாலாஜி நான் எப்பவும் உங்களுக்கு எதிரா செயல்பட்டது இல்லை. உங்க குடும்பத்துக்கு நான் துரோகம் நினைக்க மாட்டேன். நான் எப்பவும் உங்களோட இருப்பேன் என கூறியதாக பேசப்படுகிறது.