1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dileepan Mahendran will be killed in few months

சில மாதங்களில் திலீபன் மகேந்திரன் கொல்லப்படலாம்: தமிழச்சி தகவல்!

சில மாதங்களில் திலீபன் மகேந்திரன் கொல்லப்படலாம்: தமிழச்சி தகவல்!

திலீபன் மகேந்திரன்
இந்திய தேசிய கொடியை எரித்த வழக்கில் கைது செய்யப்பட்ட திலீபன் மகேந்திரேன், தற்போது சுவாதி படுகொலைக்கு பின்னர் அதிகமாக ஊடகங்களில் பேசப்படுகிறார்.


 
 
ராம்குமார் கொலை செய்யவில்லை என தமிழச்சியுடன் சேர்ந்து கூறி வரும் இவர் பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம் தான் சுவாதியை கூலிப்படை மூலம் கொலை செய்தார் என கூறினார். இதனால் கருப்பு முருகானந்தம் அளித்த புகாரின் அடிப்படையில் திலீபன் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார்.
 
இந்நிலையில் ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக வந்த தகவலை அடுத்து சுவாதியை கொலை செய்தது மணி என்பவர் தான் என்ற தகவலை கூறியிருந்தார் தமிழச்சி.
 
தற்போது அந்த மணியும் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலையும் தமிழச்சி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், திலீபனும் கொலை செய்யப்படுவார் என்ற தகவலையும் கூறியுள்ளார்.
 
அதில், மணி தற்போது கொல்லப்பட்டுள்ள நிலையில் ராம்குமார் குடும்பத்தில் உள்ள ஒருவர் கொல்லப்படுவார், அவர்களுக்கு திலீபன் போன்றோர் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என கூறிய தமிழச்சி, திலீபன் உயிருக்கும் ஆபத்து உள்ளது எனவும், அது உடனடியாக நடக்காது. சில மாதங்கள் ஆகலாம் என்றார்.
About Writer
Caston
அடுத்த கட்டுரையில்
’இயக்குனராகிறார் கவிஞர் குட்டி ரேவதி’ - ஹீரோ யார் தெரியுமா?