1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 30 அக்டோபர் 2017 (17:09 IST)

சசிகலாவை நினைத்து பெருமிதம் கொள்ளும் டிஐஜி ரூபா

சசிகலா சிறையில் சொகுசாக இருக்கிறார் என புகார் அளித்த டிஐஜி ரூபா, சசிகலா தரப்பில் இருந்து எவ்வித மிரட்டலும் வரவில்லை என பெருமிதமாக கூறியுள்ளார். 


 

 
செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிஐஜி ரூபா, சசிகலா சிறைக்கு வெளியே சென்று வந்தது பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு தனது விசாரணையை முடித்துவிட்டதாகவே தெரிய வருகிறது. ஆனாலும் அந்த குழுவின் அறிக்கை அரசிடம் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். 
 
மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:- 
 
அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள ஆவலுடன் உள்ளேன். சசிகலா போல மற்ற சில கைதிகள் மீதும் புகார் அளித்திருந்தேன். அவர்கள் தரப்பில் இருந்து எனக்கு மிரட்டல்கள் வந்தது. ஆனால் சசிகலா தரப்பிலிருந்து எனக்கு எவ்வித மிரட்டலும் வரவில்லை. 
 
இது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இதுவரை யாரும் என்னிடம் சசிகலாவுக்காக தொடர்புக்கொண்டு பேசவில்லை. ஒரு அரசியல் கட்சி தலைவர் என்ற முறையிலாவது அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் எதிர்பார்த்தேன். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.