1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 28 அக்டோபர் 2017 (21:26 IST)

எந்த ஒரு குடும்பமும் அதிமுக ஆட்சியை கைப்பற்ற முடியாது: அமைச்சர் எம்.சி.சம்பத்

இதுவரை அதிமுகவை எந்த ஒரு குடும்பமும் ஆட்சி செய்ததில்லை என்றும் இனிமேலும் அது நடக்காது என்றும் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.



 
 
முதல்வராக இருந்தபோதே தனது மனைவி அரசியலுக்கு வரமாட்டார் என்று சொன்னவர் எம்ஜிஆர் என்றும், அதேபோல் ஜெயலலிதாவும் குடும்ப ஆட்சியை விரும்பாதவர் என்றும் கூறிய அமைச்சர் சம்பத், எந்த ஒரு குடும்பமும் அதிமுக ஆட்சியை கைப்பற்ற முடியாது என்று கூறினார்
 
ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் ஆட்சி சென்றால் மக்களுக்கு நலத்திட்டங்களை செய்ய முடியாது என்பதால் அதிமுகவில் குடும்ப ஆட்சிக்கு ஆரம்பம் முதல் இடம் கொடுக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்