வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 1 ஜனவரி 2024 (13:59 IST)

வித்தியாச கட்டணம் - திரும்ப வழங்க உத்தரவு- அமைச்சர் சிவசங்கர்

henni -kilampakkam bus stand
தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு செய்தவர்களுக்கு வித்தியாச கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டுமென அமைச்சர் சிவங்கர் ஆணையிட்டுள்ளார்.
 
தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து முன்பு சென்னிய கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் சென்று வந்த நிலையில், சமீபத்தில், கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து    நிலையத்தை முதல்வ மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். 
 
மற்ற பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் இனிமேல் கிளாம்பாக்கம் செல்லும் என கூறப்பட்ட்  நிலையில், கோயம்பேட்டிற்கு பயணம் செய்ய பெறப்பட்ட கட்டணத்தில் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், பேருந்தில் பயணம் தொடங்கும்போது, நடத்துனர் மூலம் வித்தியாச கட்டணத்தை திருப்பி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதற்கு சில நடைமுறிய சிக்கல்களை தவிர்க்க வேண்டி இந்த உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.