வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (09:27 IST)

ஜெ.வை பொதுச்செயலாளர் ஆக்கியதே நாங்கள்தான் - திவாகரன் அதிரடி

தமிழக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பொதுச்செயலாளர் ஆக்கியதே நாங்கள்தான் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.


 

 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை நியமித்தது சட்டவிரோதம் எனவும், அவர் சமீபத்தில் நியமனம் செய்த நிர்வாகிகள் பட்டியல் செல்லாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இதுகுறித்து, சசிகலாவின் சகோதரரான திவாகரன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போது “ எம்.ஜி.ஆர் மறைந்த போது அதிமுகவிற்கு ஏற்பட்ட நெருக்கடியை போல் தற்போது ஏற்பட்டுள்ளது. அப்போது, 16 மாவட்ட செயலாளர்களிடம் கையெழுத்து வாங்கி, ஜெயலலிதாவை பொதுச்செயலாளர் ஆக்கியதே நாங்கள்தான்.  தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு இன்னும் மூன்று மாதங்களில் தீர்வு காணப்படும். வருகிற 14ம் தேதி மேலூர் பொதுக்கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகும்” என அவர் கூறினார்.