1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (14:42 IST)

ஜெயலலிதாவை விட தினகரன்தான் சிறந்தவர்: நாஞ்சில் சம்பத் சர்ச்சை கருத்து!

ஜெயலலிதாவை விட தினகரன்தான் சிறந்தவர்: நாஞ்சில் சம்பத் சர்ச்சை கருத்து!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விட டிடிவி தினகரன்தான் சிறந்த தலைவர் என அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத், சிறந்த ஜனநாயக தலைவராக விளங்கும் டிடிவி தினகரன் கையில் தான் ஆட்சியும், கட்சியும் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
 
மேலும் ஜெயலலிதாவை விட ஜனநாயக பண்பு அதிகம் கொண்ட தலைவர் டிடிவி தினகரன் தான். அவரை முதல்வராக்குவதே எங்கள் கனவு என கூறியுள்ள நாஞ்சில் சம்பத் ஜெயலலிதாவை குறைத்து மதிப்பிட்டு பேசியுள்ளார். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அதிமுக அணிகளாக பிளவு பட்டதில் இருந்து நாஞ்சில் சம்பத் தினகரன் அணியில் இருந்து வருகிறார். ஏதோ தினகரன் தான் தமிழகத்தை மீட்க வந்த மீட்பர் என்ற ரேஞ்சுக்கு நாஞ்சில் சம்பத் பேசி வருகிறார். இது பலருக்கும் எரிச்சலையும் ஏற்படுத்தியது.
 
ஆனால் தினகரனை புகழ்ந்து பேசி அவரிடம் நல்ல பெயர் எடுக்க ஜெயலலிதாவை குறைத்து நாஞ்சில் சம்பத் பேசியுள்ளது அதிமுக தொண்டர்களை கோபமடைய வைத்துள்ளது.