1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dhaya alagiri tweets about sasikala issue

தமிழக மக்கள் அதிர்ஷ்டசாலிகள்: அழகிரி மகன் நக்கல்

தயாநிதி அழகிரி
நேற்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.


 

மேலும், அவரே முதல்வராக வேண்டும் என தற்போதைய தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். வருகிற 9ம் தேதி தமிழகத்தின் முதல்வராக சசிகலா பதவியேற்பார் எனக்கூறப்படுகிறது. சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டது குறித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பில்லை என்றே கூறலாம். சமூக வலைதளங்களிலும் கடுமையான பதிவுக்ளை மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மகன் தயாநிதி அழகிரி டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், அவர், தமிழக மக்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஒருமுறை மட்டுமே வாக்களித்துவிட்டு மூன்று முதல்வர்களை பார்க்கிறார்கள் என்று கிண்டலாக பதிவு செய்துள்ளார்.

About Writer
bala
அடுத்த கட்டுரையில்
நந்தினியின் வளர்ப்பு சரியில்லை: அதிமுக நிர்மலா பெரியசாமி அநாகரிக பேச்சு!