தருமபுரியில் திமுக வெல்வது கஷ்டம் தான்: எம்பி செந்தில் குமார் பேட்டியால் பரபரப்பு..!
தருமபுரியில் தற்போதைய எம்பி செந்தில்குமார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது தருமபுரியில் மீண்டும் திமுக வெல்வது கடினம் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரியில் தற்போதைய எம்பி செந்தில்குமாருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில் அவர் தேர்தல் கருத்துக்கணிப்பை தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு திமுக, அதிமுக, பாஜக என மூன்று கூட்டணிகள் களம் கண்டபோது பாஜக கூட்டணியில் இருந்த பாமகவின் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றார்
சமூக அடிப்படையில் பார்த்தால் பாமக இங்கே வலுவாக இருக்கிறது, ஒருவேளை வன்னியர் சமூகத்தின் 80 சதவீத வாக்குகளை பாமக பெறுகிற நிலையில், பட்டியல் சமூகத்தினர் சிறுபான்மையினர் வாக்குகளை திமுக முழுமையாக பெற வேண்டும்.
ஆனால் அதிமுக தனி அணியாக போட்டியிடுவதால் அது சாத்தியமாகுமா என தெரியவில்லை. எனவே தருமபுரியில் திமுக வெல்வது எளிதல்ல என்றே நினைக்கிறேன் என்று அவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
திமுக எம்பிஏ தருமபுரி தொகுதி குறித்து இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva