வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (13:08 IST)

பி.டி.ஆர் ஐ.டி. துறைக்கு மாற்றியது இதுதான் காரணம்..? முதல்வர் சொன்ன விளக்கம்..!!

CM Stalin
நிதித்துறையை போலவே ஐ.டி. துறைக்கும் மாற்றங்கள் தேவைப்பட்டதால் அந்தத் துறையின் அமைச்சராக பழனிவேல் தியாகராஜனை நியமித்தேன் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்,  அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நிதி துறையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறைக்கு மாற்றியது ஏன் என்பது தொடர்பாக விளக்கம் அளித்தார். 
 
தகவல் தொழில்நுட்பத்தை முன்னிறுத்தி இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள துரையின் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நான் பாராட்டுகிறேன் என்றும்  மூன்று தலைமுறையாக நாட்டுக்கு தொண்டாற்றி வரும் குடும்பத்துக்குச் சொந்தக்காரர் அமைச்சர் பிடிஆர் என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.

 
திமுக ஆட்சியில் முதல் இரண்டு ஆண்டுகள் நிதித்துறையில் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியவர் பழனிவேல் தியாகராஜன் என்றும் நிதித்துறையை போலவே ஐ.டி. துறைக்கும் மாற்றங்கள் தேவைப்பட்டதால் பழனிவேல் தியாகராஜனை அமைச்சராக நியமித்தேன் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.