1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 15 ஏப்ரல் 2021 (18:08 IST)

ஆர்டர் செய்த தோசையை வேறொருவருக்கு கொடுத்ததால் காதை அறுத்த தனுஷ் ரசிகர்!

தான் ஆர்டர் செய்த தோசையை தனக்கு கொடுக்காமல் வேறொருவருக்கு கொடுத்த ஓட்டல் ஊழியர் ஒருவரை தனுஷ் ரசிகர் ஒரு ஓட்டல் ஊழியரின் காதை அறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தனுஷ் ரசிகர்கள் சிலர் கர்ணன் படம் பார்ப்பதற்காக சென்றனர். அப்போது தியேட்டர் அருகில் உள்ள ஓட்டலில் அவர்கள் சாப்பிட்டு கொண்டு இருந்தனர். ஒரு ரசிகர் தோசை ஆர்டர் செய்தார். அந்த தோசை தயார் ஆன உடன் ஹோட்டல் ஊழியர் மறதியாக வேறொருவருக்கு அந்த தோசையை பரிமாறிவிட்டார். 
 
இதனால் ஆத்திரம் அடைந்த தனுஷ் ரசிகர் தவறாக பரிமாறிய ஹோட்டல் ஊழியருடன் வாக்குவாதம் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதை அடுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஓட்டல் ஊழியரின் காதை வெட்டியுள்ளார். இதனால் அவருடைய இரண்டு காது இரண்டாகக் கிழிந்தது. உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், கத்தியால் வெட்டிய ரசிகரும் அவருடைய நண்பர்களும் தப்பியோடிவிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் தப்பியோடிய தனுஷ் ரசிகர்களை தேடி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது