திங்கள், 15 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By siva
Last Modified: புதன், 14 ஏப்ரல் 2021 (19:24 IST)

’கர்ணன்’ படத்தில் வருடம் மாற்றம்: உதயநிதி கோரிக்கை ஏற்பு!

’கர்ணன்’ படத்தில் வருடம் மாற்றம்: உதயநிதி கோரிக்கை ஏற்பு!
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய ’கர்ணன்’ திரைப்படத்தில் நடந்த உண்மை சம்பவங்கள் அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த நிலையில் திமுக ஆட்சி காலத்தில் நடந்தது போல் காட்டப்பட்டிருப்பதாக சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார் 
 
மேலும் இதுகுறித்து இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர்களிடம் தான் பேசியிருப்பதாகவும், இருவரும் விரைவில் மாற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார் 
 
’கர்ணன்’ படத்தில் வருடம் மாற்றம்: உதயநிதி கோரிக்கை ஏற்பு!
இந்த நிலையில் உதயநிதிக்கு அளித்த வாக்குறுதியின்படி மாரி செல்வராஜ் தற்போது கர்ணன் படத்தில் குறிப்பிட்ட அந்த நிகழ்வு 90களின் பிற்பகுதியில் இருந்து என்று மாற்றப்பட்டுள்ளது இதற்கு முன்னர் 95 ஆம் ஆண்டுகளில் நடந்ததாக கட்டப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
உதயநிதியின் கோரிக்கையை ஏற்று மாரி செல்வராஜ் இந்த காட்சியை மாற்றி உள்ளதற்கு நெட்டிசன்கள் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன