1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dhanapal submit caveat petition in sc

உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு - தினகரனுக்கு ஷாக் கொடுத்த தனபால்

Dhanapal
தகுதி நீக்க வழக்கில் தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றம் செல்ல முடிவெடுத்திருப்பதாக அறிவித்துள்ள நிலையில், சபாநாயகர் தனபால் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

 
தமிழக அரசியலில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. சபாநாயகர் தனபால் எடுத்த நடவடிக்கை தவறில்லை என கூறி 18 எம்.எல்.ஏக்களின் மனு தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.  
 
இதனால் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை இழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, நேற்று மாலை எம்.எல்.ஏக்களை சந்திப்பதற்காக தினகரன் மதுரை கிளம்பி சென்றார். அங்கு ஒரு விடுதியில், நேற்றும், இன்றும் எம்.எல்.ஏக்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.  
 
அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன் “இந்த தீர்ப்பில் பல குறைகள் இருப்பதாக எங்கள் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். சட்டப்பேரவைத் தலைவர் செய்தது தவறு என உலகம் அறிய வேண்டும் என்பதற்காகவே மேல் முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளோம்” என தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், சபாநாயகர் தனபால் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தால் தீர்ப்பளிக்கும் முன் தன் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
சூப்பர் மேனாக மாறி குற்றவாளிகளை பிடித்த நீதிபதி